gomcoastalnews. Powered by Blogger.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

No comments

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

First Published : 14 August 2015 12:04 AM IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தை பார்வையிட ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் மற்றும் மாவட்ட அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஊராட்சியின் அடிப்படை வசதிகள், அங்கு நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் சொத்து விவரங்கள், ஏப்ரல் முதல் ஜூலை முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியில் செயல்படும் ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், 2015-16ஆம் ஆண்டுக்கு 14ஆவது நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு அங்கீகாரம் பெறுதல் உள்ளிட்டவை எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

No comments :

Post a Comment