பாம்பன் ரயில் பாலத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
பாம்பன் ரயில் பாலத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி பாம்பன்
ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயுதம்
தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம் தீவு முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.
மயில்வாகனன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனையொட்டி பாம்பன்
கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் தண்டவாளங்கள், இரும்பு கர்டர்கள்
மற்றும் தூக்குப் பாலம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பாலத்தில் ரயில்கள் வந்து, செல்லும் போது தீவிரமாக கண்காணிக்க
வியாழக்கிழமை முதல் ஆயுதம் தாங்கிய போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி
நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல ராமேசுவரம் பகுதிக்கு வரும் வாகனங்கள் மண்டபம்
சுங்கச் சாவடி பகுதியில் போலீஸார் சோதனை செய்த பின்னரே பாம்பன் சாலைப்
பாலத்தில் அனுமதிக்கப்படுகின்றன. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், பாம்பன்
மற்றும் ராமேசுவரம் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம், அஞ்சல் அலுவலகம்
மற்றும் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகள் உள்பட கடலோரப்
பகுதிகளை உளவுத்துறை மற்றும் தனிப்பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்து
வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment