gomcoastalnews. Powered by Blogger.

ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம்

No comments

ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம்

First Published : 15 August 2015 12:48 AM IST


ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதியில் வழிபாடு செய்தனர்.
 ஆடி அமாவாசையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு காலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் சன்னதியில் அதிகாலை பூஜைகளை தொடர்ந்து அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். பின்னர், முன்னோர்களுக்கு தர்பன பூஜைகள் செய்தனர். திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். சிறப்பு பூஜைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். மாவட்ட எஸ்.பி. மயில்வாகணன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments :

Post a Comment