தடை காலத்தில் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார்
தடை காலத்தில் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச்
செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார்
By ராமநாதபுரம்
First Published : 23 April
2015 04:08 AM IST
தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடல் வளத்தை சூறையாடி வருவதாக, தமிழ்நாடு மீன்பிடித் தொழிற் சங்கக் கூட்டமைப்பினர், ராமநாதபுரம் ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் செய்தனர்.
கடல் வளம் அழிந்துவிடாமல் பாதுகாக்கவும், மீன்களின்
இனப்பெருக்கக் காலம் என்பதாலும், ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை மீன்களைப்
பிடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மீனவர்களும், தடை
செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியும், டிராக்டர்
தோணி எனப்படும் இயந்திரம் பொருத்திய படகுகளைப் பயன்படுத்தியும் கடல் வளத்தை சூறையாடி
வருவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரை மீனவர்கள் சந்தித்து புகார்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக்
கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் சி.ஆர். செந்தில், மாவட்டச்
செயலர் எம். கருணாமூர்த்தி, கடலாடி தாலுகா ரோச்மா நகர் மீனவ
சங்கத் தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, மாரியூர்,
முந்தல், ரோச்மா நகர் உள்ளிட்ட தெற்கு கடலோரப்
பகுதிகளில் தூத்துக்குடி மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தடை
செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்களைப்
பிடித்து வருகின்றனர். இதேபோல், ராமநாதபுரம் தாலுகாவுக்கு
உள்பட்ட இரணியன்வலசை, புதுவலசை, சத்திரம்,
புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களில் சிலர்
டிராக்டர் தோணி படகுகளில் சென்று மீன் பிடிக்கின்றனர்.
இதனால், பாரம்பரிய மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும்
நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகு கரைவலை மீனவர்களின் மீன்பிடித்
தொழிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
எனவே, தீவிர கவனம் செலுத்தி சட்டவிரோத மீன்பிடிப்பை தடை செய்து, டிராக்டர் தோணிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள்
ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment