மீன் முள் குத்தியதில் மீனவர் காயம்
மீன் முள் குத்தியதில் மீனவர் காயம்
By ராமேசுவரம்
First Published : 22 April
2015 03:06 AM IST
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த
மீனவர் ஒருவருக்கு பெரிய மீன் முள் குத்தியதில் பலத்து காயமடைந்து ராமேசுவரம் அரசு
மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு கிகிச்சை பெற்று வருகிறார்.
ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த
தாஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் வின்சென்ட்எட்வெட்ஜெயராஜ், நிமல், முரளி உள்ளிட்ட நான்கு பேர் கடலுக்குள்
மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது
வலையில் களிங்க முரல் என்று பெரிய வகை மீன் சிக்கியுள்ளது. இந்த மீனை
வின்சென்ட்எட்வெட்ஜெயராஜ் வலையிலிருந்து பிரித்து எடுக்க முயன்றார்.
அப்போது, மீன் வாய்ப் பகுதியிலிருந்த கூர்மையான முள், அவரது
வலது காலில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மற்ற மீனவர்கள் படகில் அழைத்து
வந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று
வருகிறார்.
Dinamani
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment