gomcoastalnews. Powered by Blogger.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

No comments
மீனவர் நலனை பாதுகாப்பதில் முன்மாதிரியாக திகழும் 

தூத்துக்குடி மாவட்டம் - ஆட்சியர் பேச்சு

வெள்ளி 10, ஏப்ரல் 2015 4:02:12 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ரவிகுமார் தலைமையில் இன்று நடந்தது. மீன் துறை இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர் ஐசக் ஜெயகுமார் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர் பிரதிநிதி சங்கத்தினரின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.  

சமூக ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தி பேசுகையில், மாவட்ட ஆட்சியர் எல்லா தரப்பினருக்கும் பட்டா வழங்கி வருகிறார். மீனவ கிராம மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் நடத்த வேண்டும். மீன்பிடி துறைமுகத்தில் எந்த நேரத்திலும், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்கிள் ஓடையில் இருந்து வரும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி நகர் தொழிற்சாலைகளால் மாசுபட்டு வருகிறது. காற்றில் கலந்துள்ள மாசுக்களை கண்டறிய கருவிகள் பொருத்த வேண்டும் என்றார்.

விசைப் படகு தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபன் பேசுகையில், விசைப்படகு தொழிலாளர்கள் விபத்தால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஏற்படும் ஊனத்திற்கு ஏற்ப நிவாரண உதவி வழங்க விசைப்படகு உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்றார். 

கூட்டுறவு சங்கத்தலைவர் அகஸ்டின் பேசுகையில், மீனவர் நிவாரண நிதி பெறுவதற்கு குடும்ப அட்டையை அவசியமாக கருதக்கூடாது. மீனவர்கள் அனைவருமே தேசிய அடையாள அட்டை வைத்துள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். மீனவர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும். மேலும், மீனவர் நலவாரிய உதவித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்றார். 

கூட்டத்தில் ஆட்சியர் ரவிகுமார் பேசுகையில், மீனவர்களின் நலனை பாதுகாப்பதில் பிற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் முன்மாதிரியாக கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் கோரிக்கைளை பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்றார். முன்னதாக மீனவர் குழு காப்புறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

No comments :

Post a Comment