Gulf Of Mannar Coastal News

gomcoastalnews. Powered by Blogger.

News Scroling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Recent Posts

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

No comments

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

 24 Mar, 2018 10:30 am





ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

No comments

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

Posted By: 
Updated: Saturday, March 24, 2018, 12:10 





தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் இன்று பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக போராடி வருகின்றனர்


இன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை சுற்றிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்களும், பல சமூக அமைப்புகளும் இணைந்து இன்று தூத்துக்குடியில் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடத்த உள்ளனர்.

tamil.oneindia

மார்ச் 26ல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி துவக்கம் : முன்பதிவுக்கு அழைப்பு

No comments

மார்ச் 26ல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி துவக்கம் : முன்பதிவுக்கு அழைப்பு


சனி 24, மார்ச் 2018 8:57:59 AM (IST)


தூத்துக்குடியில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தருவைக்குளத்தில் இயங்கிவரும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் மார்ச் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர் வாழ் உயிரின வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சியின்போது, ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர் வாழ் உயிரின வளர்ப்பின் அடிப்படைத் தத்துவம் மற்றும் தற்போதைய நிலை, வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ப்பிற்கேற்ற கடல் மீன்களின் உயிரியல் பண்புகள், வளர்ப்பு கூண்டுகள் அமைக்கும் முறைகள், கூண்டுகளில் வளர்க்கப்படும் கடல் மீன்களின் உணவு முறைகள், கூண்டுகளில் கடல் மீன்களின் வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை, ஒருங்கிணைந்த் கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பின் பொருளாதார பயன்கள் போன்ற பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் நடத்தப்படும்.

பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 500 செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் மார்ச் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி 628 105 என்ற முகவரியில் நேரிலும், 0461-2277424 என்ற தொலைபேசி எண்ணிலும், 9994450248 மற்றும் 9994450663 என்ற செல்பேசிஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!

No comments

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!


Posted Date : 11:35 (31/03/2017) Last updated : 11:34 (31/03/2017)


அரை கிலோமீட்டர் நீளத்திற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட மேடை இல்லை. இங்கு மண் தான் மேடை.  பெரிய கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இல்லை. மண்ணால் கட்டப்பட்ட குடில்கள் தான். வானைத் தொடும் ஆதி யோகி சிலைகள் இல்லை. கூழாங்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கைத் தத்துவ தத்ரூபங்கள் மட்டுமே இருந்தன. நீளமான தாடி வைத்த சத்குருக்கள் இல்லை. குறுந்தாடி வைத்திருக்கும் சிவராஜ் அண்ணன் தான் இருந்தார். திறப்பு விழாவிற்கு நரேந்திர மோடி வரவில்லை. "குழந்தைகள் பொம்மைகளை உடைப்பது தான் பேரழகு" என்று சொல்லும் அரவிந்த் குப்தா தான் வந்திருந்தார். பணம் இருப்பவர்களுக்கு முன் வரிசை, பணம் இல்லாதவர்களுக்கு வரிசையிலேயே இடமில்லை என்ற கதை எல்லாம் இல்லை. இங்கு நீங்களும், நானும், யாரும் சமம் தான். அனைவருக்குமான நிலமாக உருவெடுத்திருக்கும் "குக்கூ காட்டுப் பள்ளியின்" முறையான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வு அது. 

கருப்பு நிற தார்ச்சாலையிலிருந்துக் கிளம்பிய அனலின் பிரதிபலிப்பு, கைகளைக் கருக்கியது. சிங்காரப்பேட்டையை அடைந்திருந்தேன். அங்கு கூடையில் வடை விற்றுக் கொண்டிருந்த அண்ணனிடம்... " ண்ணா இங்க அந்தப் பள்ளி..." "குக்கூ ஸ்கூல் தானே? அதோ அந்தத் தக்காளி மண்டியத் தாண்டி இடது பக்கம் திரும்புங்க. 5 கிமீ... காலைலேருந்து உங்கள மாதிரி ஆட்கள் நிறையப் பேரு போனாங்க. வடை சாப்பிடிறீங்களா... சூடா இருக்கு" . " நன்றி" சொல்லி வேண்டாம் என்பதாய் தலையாட்டி அந்த தக்காளி மண்டியைத் தாண்டி திரும்பினேன்.

உடைந்த தார்ச்சாலையைக் கடந்து, மண் சாலையில் பயணம் தொடர்ந்தது. வெயிலினால் சுணங்கிப் போயிருந்த முகம், மலையடிவாரத்திலிருந்து பரந்திருந்த அந்த நிலப்பரப்பைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகியது. பழைய மரத்தட்டிகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்த அந்த நுழைவு வாயில் அருகே, சாணியைக் கரைத்து மொழுகிக் கொண்டிருந்தார் அந்த அக்கா. தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாய் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர், இந்தியா முழுவதிலிமிருந்து வந்திருந்த இயற்கைத் தன்னார்வலர்கள். 

ஒரு குழு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மண் பானைகளில் வெட்டிவேரையும், எலுமிச்சம் பழத்தையும் போட்டு நீரை நிரப்பிக் கொண்டிருந்தது. ஒரு குழு மாலை நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தது. ஒரு சிலர் அயர்ச்சியில் அந்தக் குடில்களில் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டம் கிணற்றில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில குழந்தைகள் தங்கள் உயரத்திற்கான சிறு கடப்பாரைகளைக் கொண்டு மண்ணைத் தோண்டி செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு யாருக்கும் எந்த அடையாளங்களும் இருக்கவில்லை. ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டு, சிநேகப் புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டுமிருந்தார்கள். 

மெல்லிய தேகம், செருப்பில்லா கால்கள், அழுக்கடைந்த பருத்தி வேட்டி, சட்டை, முகம் முழுக்கப் புன்னகை... சிவராஜ் அண்ணன். புளியனூர் கிராமக் குழந்தைகளின் " சோட்டா பீம்" . நம்மாழ்வாரின் சீடன். 
" ஒவ்வொருக் குழந்தையும் ஒரு தூய்மையான ஆத்மா. நம்முடைய இன்றையக் கல்விச்சூழல் அவர்களை மொத்தமாக நசுக்குகிறது. குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளர்க்கும் ஒரு முயற்சி, அவர்களின் இயற்கையை இயற்கையோடு இணைக்கும் ஒரு முயற்சி தான் குக்கூ காட்டுப் பள்ளி. குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியோடு, இயற்கை வழி விவசாயம் ,மருத்துவம்,அரசியல் குறித்த விவாதங்கள், விலங்குகள், பூச்சிகள், வானியல், நட்சத்திரம், குறித்த கற்பித்தல் , கூடை முடைவது, தையல் கலை ,காகிதம் தயாரிப்பது, மண்,மரம்,காகிதம்,சிரட்டை இவற்றைக் கொண்டு பொம்மைகள்,சிற்பங்கள் செய்வது,ஓவியம் வரைவது, பறவைகளின் சப்தம் கொண்டு இசைக் கோர்வை உருவாக்குவது,கதை சொல்லுவது,நாடகம் நடிப்பது,கூத்துப் பயிற்சிகள் என அவர்கள் உலகை அழகியலோடு தக்க வைக்கும் ஒரு இடம் தான் குக்கூ காட்டுப் பள்ளி..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அரவிந்த் குப்தா அங்கு வந்தார். 
அரவிந்த் குப்தா 1970களில் கான்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பு முடித்தவர். குப்பைகளிலிருந்து பலவிதமான பொம்மைகளை செய்யத் தொடங்கினார். இவரின் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றால், கம்பெனிகள் கோடிகோடியாகக் கொட்டி கொடுத்திருக்கும். ஆனால், என் கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்காவை. அதில் பணம் பண்ணும் நோக்கம் எனக்கில்லை என்று சொன்னவர். aravindguptatoys.com என்ற வலைதளத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான அறிவியல் விளக்கங்கள், கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களின் மின் - புத்தகங்களாக பதிவேற்றி, அதை யாரும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். 
"குழந்தைகள் அழகான விதைகளைப் போன்றவர்கள். அவர்களை விதைக்க இங்கு வளமான மண் தான் சரிவர இல்லை... " என இன்றைய கல்விச்சூழலில் பெரும் அரசியலை மிக எளிமையாக சொல்லி நகர்ந்தார். இப்படியான பல மனிதர்களால் நிறைந்திருந்தது குக்கூ.
மாலை... வெயிலின் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது. சில மரக்கட்டைகள் நாற்காலிகளாக மாறியிருந்தன. குழந்தைகள் பாய்களில் உட்கார்ந்துக் கொண்டனர். வேலு சரவணனின் "கடல் பூதம்" நாடகத்தின் சிரிப்பொலியில் தொடங்கிய நிகழ்ச்சி, "நிலமற்றவர்களின் நிலம்" என்ற கோவை ஜெயராஜின் நாடகத்தோடு உணர்ச்சிப்பூர்வமாக முடிந்தது. 

"குக்கூ குழந்தைகளுக்கான இடம் மட்டுமே அல்ல. அய்லான்களும், இரோம் ஷர்மிளாக்களும், நீங்களும், நானும்... நிலமற்ற யாவருக்குமான இடம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் இந்நிலம் இருக்கும். இது நிலமற்றவர்களின் நிலம். யாரும் இங்கு வரலாம். இது எல்லோருக்குமான இடம். " என்று விடைபெறும் நேரம், கைகுலுக்கி சிவராஜ் நம்மிடம் சொன்னார். அந்த இரவில் அடுத்த நாளைக்கான நெருக்கடிகள் இருந்த பலரும் கிளம்பினார்கள்... அது இல்லாதவர்களும், ஏதுவும் இல்லாத சிலரும் குக்கூவிலேயே தங்கினார்கள். "குக்கூ"... சொல்லிப் பாருங்கள். அந்த சத்தம் ஒருவித அமைதியை, நிம்மதியை, மகிழ்ச்சியை, பரவசத்தைக் கொடுக்கிறது.

இந்தியாவில் 58% குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

No comments

இந்தியாவில் 58% குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

Posted Date : 17:27 (06/03/2017) Last updated : 17:36 (06/03/2017)


இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 58% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உணவில் போதுமான அளவில் இரும்புச் சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் கீரை, பழங்கள் போன்றவற்றை சரிவர சாப்பிடாத காரணத்தினாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.

ரத்தசோகையால் ஏற்படும் நிலையில் தொற்றுநோய் பாதிப்பும் மூளை வளர்ச்சி பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  2015 - 2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஆறு லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரே வயதைச் சேர்ந்த குழந்தைகளில் 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 21% குழந்தைகள் பிற குறைகளுடனும், 30% எடை குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
2015-ம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை  12.4 கோடி ஆகும். அதில் 7.2 கோடி குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உளவியல் நிபுணர் பற்றாக்குறை: 4 லட்சம் பேருக்கு ஒருவரே உள்ளார்

No comments

இந்தியாவில் உளவியல் நிபுணர் பற்றாக்குறை: 4 லட்சம் பேருக்கு ஒருவரே உள்ளார்

Published: March 31, 2017 10:10 ISTUpdated: March 31, 2017 10:44 IST



நிம்கேர் அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக சுகாதார தின உச்சி மாநாடு டெல்லியில் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநாட்டு தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் பேசும் போது, “இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளார். இந்தியாவில் தற்போது 4 ஆயிரம் உளவியல் நிபுணர்கள், ஆயிரம் உளவியலாளர் கள் மற்றும் 3 ஆயிரம் சமூக பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மன அழுத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

தொலைதூர மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் ஆகியவற்றை மையக் கருத்தாக கொண்டு டெல்லியில் உலக சுகாதார தின உச்சி மாநாடு நடக்கவுள்ளது” என்றார்.
இந்த சந்திப்பில் திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், விவேக், டெலிமெடிசன் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஊருக்குள் கடல் நீர் புகுந்தது : தூத்துக்குடியில் பரபரப்பு - மீனவர்கள் அச்சம்...

No comments